புனிதவாரப்பாடல்கள் | 1539- | தூய வெள்ளி |
கல்வாரிக் காட்சி அரங்கேறும் நேரம் கர்த்தரின் உருவம் சிதையுதையா 1) தீர்ப்பிடாமல் வாழ்ந்தவர்க்கு மரணத்தீர்ப்புத் தேவையா? - 2 வாழ்வு தந்த வள்ளலுக்கு சிலுவை மரணம் தேவையா?- 2 2) சுமை சுமந்து சோர்ந்தவர்க்கு சுகம் தந்து காத்தீரே - 2 பாவச் சிலுவை மரணமாபாவம் செய்த கொடுரமா?- 2 3) தொலைந்த என்னைத் தேடினீர் வீழ்ந்த என்னைத் தூக்கினீர் - 2 நான் தந்த பாவச் சுமையால் தரையில் வீழ்ந்து தவிக்கிறீர் - 2 4) தாயின் முகம் பார்க்கிறீர் தந்தை சொல் கேட்கிறீர் - 2 மௌனம் தந்து போகிறீர் மரியின் தேகம் வேகுதே - 2 5) தேடிவந்த எல்லோர்கும் ஓடிச் சென்று உதவினீர் - 2 உடல் சிதைந்து உருக்குலைந்து உதவிக் கரம் தேடினீர் - 2 6) கண்ணீரில் வாழும் என்னை உம் கரம் தொட்டு தூக்கினீர் - 2 செந்நீரில் சிதைந்ந உம் முகத்தை பரிசாக தந்து சென்றீர் - 2 7) என் சுமை எளிது என்றீர் என் நுகம் அழுத்தாதென்றீர் - 2 நடை தளர்ந்து போகிறீர் மீண்டும் மண்ணில் சாய்கிறீர் - 2 8) மார்த்தாவின் கண்ணீர் கண்டு இலாசருக்கு உயிர் கொடுத்தீர் - 2 இம்மங்கையரின் கண்ணீர் கண்டு மனமுடைந்து போகிறீர் - 2 9) வீழ்ந்த விதை முளைக்காதோ வீறு கொண்டு துளிர்க்காதோ - 2 வீழ்ந்து மண்ணில் கிடக்கிறீர் மனித பாவ பாரத்தால் - 2 10) ஆதி மனிதன் பாவம் செய்து ஆடை கண்ட போதிலும் - 2 நீர் செய்த பாவம் என்னை உடை இழந்து போகிறீர் - 2 10) அதிசயங்கள் செய்த கரங்கள் ஆணிகளால் அறைந்து தொங்க - 2 பரிசுத்த பாதமிரண்டும் ஆணிகளின் வேதனையால் - 2 11) கடவுளாக இருந்த நீர் மனிதனாக மாறினீர் - 2 பாவி நாங்கள் வாழ்வு பெற உம் உயிரை கொடையாத் தந்தீர் - 2 12) பத்துமாதம் சுமந்து உன்னை பார்த்துப் பார்த்து ரசித்து வந்தேன் - 2 மீண்டும் மடியில் தவழ்கிறீர் உயிரிழந்த உடலினால் - 2 13) விண்ணில் வாழ்ந்த உன்னைக் கொண்டு மண்ணில் மூடப்பார்க்கிறோம் - 2 மூன்று நாளில் வந்து எம்மை மோட்சம் கொண்டு சேர்ப்பாயா? - 2 |