புனிதவாரப்பாடல்கள் | இரக்கத்தை இறைவா பொழிந்தருளும் | தூய வெள்ளி |
இரக்கத்தை இறைவா பொழிந்தருளும் உயிர்கள் அனைத்தையும் காத்தருளும் 1. கொடியோரின கூட்டத்தில் கோமகனே - உனக்கு குவலயமதில் வாழ வழியில்லையோ வாழ்வினை இழக்க துணித்தனையோ - எனக்காய் 2. பாரமான சிலுவையினை - உம் தோள்மேலே சுமக்க ஏற்றாயோ சிலுவை பயணத்தை தொடர்ந்தாயோ - நீர் 3. முதலாம் முறையாய் நீர் விழுந்தீர் உடுதலைப் பணியின் வழி தொடர்ந்தீர் வீதியில் விழுந்தாய் விழுந்தனையோ - வாழ்வின் 4. துயரத்தின் பிடியில் துடித்தீரே - உமக்கு துணையாய் அன்னையும் வருவாளே பாசத்தின் நிலையை புரிந்தோமே - அன்னை 5. மறுத்திட முடியா சீமோனும் - உம் சிலுவையை சுமக்க உதவினாரே துன்பத்தில் துணையாய் இருந்திடவே - பிறர் 6. செந்நீரில் குளித்தது உம் திருமுகமே வெரோணிக்கா துகிலால் துடைத்தாளோ மாறாத திருமுகம் பதித்தாயே - நெஞ்சில் 7. மனிதத்தின் கவலை சூழ்ந்ததனால் நீர் இரண்டாம் முறையாய் விழுந்தீரே நம்பிக்கை துரோகம் செய்தனரே - உமக்கு 8. எருசலேம் பெண்களின் அழுகுரல்கள் - உம் இதயத்தை அசைத்துப் பார்த்ததுவோ ஆறுதல் தந்து நடந்தீரே - என்றும் 9. தாங்க முடியா சுமையாலே - நீர் தள்ளாடி மூன்றாம் முறை விழுந்தீர் இலக்கினை நீரும் அடைந்தீரே - உம் 10 உடைகளை இழந்து உரிமையைச் கொடுத்து உறவுக்கு சாட்சியாய் நின்றீரெ மானத்தை இழந்து மனதில் புகுந்தாய் - உன் 11 கல்வாரி மலையில் கள்வரின் நடுவில் உன்னையும் சிலுவையில் அறைந்தனரே மன்னித்து வாழ மொழிந்தீரே - என்றும் 12. அன்பே உயிரென்று சொன்னவரே - இன்று எனக்காய் உமதுயிர் தந்தாயே உடலுக்கு உயிராய் வந்து நின்றாய் - எம் 13. உதிரத்தை கொடுத்து அன்னையவள் - இன்று உயிரற்ற உடலைத் தாங்குகின்றாள் இதயத்தின் இயக்கம் நின்றதுவே - அன்னை 14. அநீத செயல்கள் அனைத்தையுமே - உம் கல்லறையோடு புதைத்தாயே நீதி நேர்மை நிலைத்திடவே - நின் நனைவுகள் புவியில் நிலைத்தனவே |