புனிதவாரப்பாடல்கள் | என் பாவம் சுமந்த | தூய வெள்ளி |
என் பாவம் சுமந்த இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2 1) முள்முடி சூட்டப்பட்டு சாட்டையால் அடிப்பட்டு, இரத்தம் சொட்டச் சொட்ட, வேதனை கூடுதே -2 பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய் -2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2) 2) கயவர்கள் புடை சூழ காரித் துப்பபட்டீர் கண்முன் தெரியாமல் மண் வாரி இறைக்கப்பட்டீர் -2 பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய் -2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2) 3) அற்புதங்கள் அதிசயங்கள் அனுபவித்த கூட்டம் எங்கே அரசியல் செய்திடும் அநியாயக் கூட்டம் இங்கே-2 பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி விழுகின்றார் -2) 4) நீதியும் நேர்மையும் எழுந்து நின்று போராட, உன் தளர்ந்திட்ட கால்களும், எழுந்து நடக்கத் துடிக்குதே -2 பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2) 5) சுமைகளை அள்ளித் தந்த சொந்தங்கள் ஓடிச் செல்ல, ஆறுதல் தேடும் உள்ளம் அனாதைகள் இல்லம் சேர -2 பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2) 6) சிதைந்திட்ட முகங்கள் எல்லாம் புதைந்திட்ட உண்மைகள் தானே, பெண்களின் உடலை தின்னும் - அதிகார புழுக்கள் இங்கே-2 பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2) 7) எளியவர்கள் தரையில் தானோ??? அவர்கள் உரிமை எல்லாம் விலையில் தானோ???, விழுந்திட்ட மனிதம் இங்கே மிதிந்திட்ட சருகுகள் தானோ??? பாவம் நான் செய்தேன், பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி விழுகின்றார் -2) 8) வழிந்திடும் கண்ணீருக்குள்,ஒளிந்திட்ட காயம் கண்டு, வார்த்தைகளில் அல்ல -உன் வாதைகளில் ஆறுதல் சொன்னீர் -2 பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய் -2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நடக்கின்றார் -2) 9 பாதையில் போதையில் விழுந்து கிடக்கும் மானிடமே, உன் சந்ததியின் நிலைக் கண்டேன், சரிந்திடும் என் கால்கள் ஊன்றி எழுந்திட நீ வருவாயா??? பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே-2 (என் பாவம் சுமக்கும் இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி விழுகின்றார் -2) 10) வேளியே பயிரை மேய,வேடிக்கை பார்க்கிறோம், உரிமைகள் விற்று விட்டு, வெற்றுடம்பில் வாழ்கிறோம் -2 பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய் -2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமந்த இயேசுவே பாரம் தாங்காமல் தள்ளாடி தடுமாறி நிற்கின்றார் -2) 11) குற்றவாளி கூண்டில் இல்லை, குற்றம் செய்வோற்கு தண்டனை இல்லை, நல்லவர் இறந்திடும் நாடகம் நடக்குதே -2 பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமந்த இயேசுவே சிலுவையின் மேலே சித்திரமாக சிதைகின்றார் -2) 12) கடவுளின் ஆசை அன்று மனிதனாக வாழ்வது, மனிதரின் ஆசை தன்னை கடவுள் என்று சொல்வது -2 பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமந்த இயேசுவே வானுக்கும் மண்ணுக்கும் இடையே சிலுவையில் இறக்கின்றார் -2) 13) பெற்றவளின் கருவறையில் பற்றவைத்தேன் தீ ஒன்று, பெற்றோரும் உடன் இல்லை -என் உறவுகளில் உயிர் இல்லை -2 பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமந்த இயேசுவே தாயின் மடியில் சேயாக மீண்டும் கிடக்கின்றார் -2) 14) அடைக்கலம் தேடிடும் உயிர்களுக்கிடமில்லை, அண்டிப்பிழைத்தாலும் அவனோடு கல்லறை இல்லை, பாவம் நான் செய்தேன் பரிகாரம் நீயானாய்-2 ஐயோ பாவம் இயேசுவே -2 (என் பாவம் சுமந்த இயேசுவே சாவைக் கொன்று விட்டு வாழ்வை மீட்டு தருகின்றார் -2) |