Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் என்னை நேசிக்கின்றாயா சிலுவைப் பாதை

என்னை நேசிக்கின்றாயா - 2
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா? - 2
உம்மை நேசிக்கின்றேன் நான் - 2
கல்வாரி காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பேனா? - 2

1. பிலாத்துவின் அரண்மனையில் - நீர்
சிலுவைக்கு தீர்ப்பானீர் - 2 (என்)
பாவத்தின் தீர்ப்புதான் அந்த சிலுவை - என்னை
மன்னித்து ஏற்றுக்கொள்ளும் (உம்மை)

2.  இயேசுவின் திருத்தோளில் - பார
சிலுவையை சுமத்தினரே 2 (அதை)
சுமக்க வைத்தது யூதரல்ல
எந்தன் பாவத்தின் காரணம்தான்......

3. பாரம் தாங்காமல் மன்னன்
மண்ணில் வீழ்ந்தாரே -2 (இந்த)
மானிடன் செய்த பாவங்களால்
நீர் மண்ணில் சாய்ந்தீரோ

4. இயேசுவின் துன்ப நிலையை பெற்றத்
தாய் கண்டு கதறுகிறாள் - 2 (ஓர்)
ஆறுதலும் சொல்ல முடியானல்
அன்னை தவித்தே நின்றழுதாள்

5. சிலுவையை சுமக்கையிலே
பாரம் தாங்காமல் துடித்தீரே 2 (சீமோன்)
உதவி செய்தது போல் நானும்
உன் பாரம் தாங்கிடுவேன்

6. இரத்தமும் வேர்வையும்
வழிந்தோடிய உம் முகத்தை -2 (அன்பில்)
துடைத்த மாதின் சிறு துணியில்
நிலையாய் உன் உருபதித்தாய்

7. இறைவா எனக்காக - மீண்டும்
தரையில் விழுந்தீரே 2 (இம்)
மானிடர் பாவம் போக்கிடவே
அந்தோ எழுந்தே நடந்துவிட்டீர்

8. இயேசுவை பின் தொடர்ந்த
பெண்கள் கூவி அழுதனரே - 2 (உங்கள்)
பிள்ளைகளுக்காக அழுங்கள் என்று
அன்பு கூறி வழி தொடர்ந்தீர்

9. மூன்றாம் முறை விழுகையிலே - இயேசு
நடந்திட மெய் நொந்தார்-2 (கல்லும்)
கரையும் காட்சியைக் கண்ட பின்னும்
மனிதா மனம் மாற்றி கொள்ளாயோ

10. உறைந்த உம் ஆடைகளை
வெகு கோரமாய் களைந்தனரே -2 (மேலும்)
குருதி மடையாய் திறந்திடவே
மெய் சிலிர்த்து நிற்பதை பார்

11. சுமந்த சிலுவையின் மேல்
உன்னை சுமையாய் அறைந்தனரே - 2 (அந்த)
வேதனை தாள முடியாமல்
என் தேவன் கதறுகிறார்

12. இறைவனின் கரங்களிலே உமது
ஆவியை ஈந்தீரோ - 2 (அன்று)
இறைவன் உரைத்த அருள்வாக்கை 
இன்று நிறைவேற்றி வைத்தீரே

13. உயிரற்ற இறைமகனை - அன்னை
மடியினில் தாங்கி கொண்டு - 2 (அந்த)
வேதனை தாங்க முடியாமல்
மனம் நொந்து அழுவதை பார்

14. மாற்றானின் கல்லறையில் - உடல்
அடங்கி இருந்தீரே -2 (மூன்று)
நாட்கள் முடியும் வேளையிலே
நீர் உயிர் பெற்று எழுவீரே ...



 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?