Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1539- தூய வெள்ளி



என்னை நேசிக்கின்றாயா மகனே!
என்னை நேசிக்கின்றாயா மகளே (2)

1) முள்முடி ஏற்றேன் கசையடி சுமந்தேன்
நீ செய்த பாவத்தால் தீர்ப்புக்குள்ளானேன்
நீ செய்த பாவத்தால் தீர்ப்புக்குள்ளானேன்


2) உன் மீட்பை நினைத்தேன் சிலுவையை சுமந்தேன்
மரணம் வரை உனக்காய் துன்புற நினைத்தேன்
மரணம் வரை உனக்காய் துன்புற நினைத்தேன்


3) உடல் பலம் இழந்தேன் குருதியும் இழந்தேன்
உன் பாவ சுமையால் முதல்முறை விழுந்தேன்
உன் பாவ சுமையால் முதல்முறை விழுந்தேன்


4) தாய் கண்ணீர் கண்டேன் தாய்ப்பாசம் உணர்ந்தேன்
உன் தாயை என் தாய்போல் காத்திட அழைத்தேன்
உன் தாயை என் தாய்போல் காத்திட அழைத்தேன்


5) மரணத்தை அடைந்தேன் சீமோன் தோள் கொடுத்தார்
சீமோனாய் பிறர் துன்பம் சுமந்திட அழைத்தேன்
சீமோனாய் பிறர் துன்பம் சுமந்திட அழைத்தேன்


6) குருதியில் நனைந்த என் முகத்தை துடைத்தாள்
வெரோணிக்காவாய் பிறர் கண்ணீர் துடைப்பாய்
வெரோணிக்காவாய் பிறர் கண்ணீர் துடைப்பாய்



7) மன்னிப்புக் கொடுத்தேன் பாவத்தை தொடர்ந்தாய்
இரண்டாம் முறையும் உன் பாவத்தால் விழுந்தேன்
இரண்டாம் முறையும் உன் பாவத்தால் விழுந்தேன்




8) ஜெருசலேம் மகளிர் அழுகுரல் கேட்டேன்
உன் பாவத்தை நினைத்து அழுதிட அழைத்தேன்
உன் பாவத்தை நினைத்து அழுதிட அழைத்தேன்



9) பாவத்தைக் களைந்திட மறுத்திடும் உம்மால்
மூன்றாம் முறையும் கீழே விழுந்தேன்
மூன்றாம் முறையும் கீழே விழுந்தேன்



10) மாசில்லா ஆடையை களைந்து எறிந்தனர்
மனித நேய ஆடையை உடுத்திட அழைத்தேன்
மனித நேய ஆடையை உடுத்திட அழைத்தேன்



11) உன்பாவங்கள் என்னை சிலுவையில் அறைந்தன
உன் உள்ளத்தை என் சிலுவையில் அறைவாய்
உன் உள்ளத்தை என் சிலுவையில் அறைவாய்



12) பழிகளைச் சுமந்தேன் உன் பாவங்கள் சுமந்தேன்
சிலுவையில் உனக்காய் உயிரையே துறந்தேன்
சிலுவையில் உனக்காய் உயிரையே துறந்தேன்

        உம்மை நேசிக்கின்றேன் ஐயா இயேசையா (2)
        ஆடுகள் போல் வழி தவறினேன் ஐயா
        உமக்கெதிராய் பாவம் செய்தேனையா
        என் தீச் செயல் அனைத்தும் உம் மேல் சுமந்தீர்
        எனக்காகச் சிலுவையில் உயிரையே கொடுத்தீர்
        உமக்கெதிராய் பாவம் செய்தேனையா
        உம்மை நேசிக்கின்றேன் ஐயா இயேசையா (2)


13) இறைவனின் திருவுளம் வாழ்ந்தாள் என் அன்னை
தாய்போல் என் விருப்பம் வாழ்ந்திட  அழைத்தேன்
தாய்போல் என் விருப்பம் வாழ்ந்திட  அழைத்தேன்
உம்மை நேசிக்கின்றேன் ஐயா இயேசையா (2)


14) அடக்கம் செய்தார்கள் மூன்றாம் நாள் எழுவேன்
உன் பாவத்திலிருந்து உயிர் பெற அழைத்தேன்
உன் பாவத்திலிருந்து உயிர் பெற அழைத்தேன்
உம்மை நேசிக்கின்றேன் ஐயா இயேசையா (2)


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?