புனிதவாரப்பாடல்கள் | -உனக்காக மரித்தேனே | தூய வெள்ளி |
உனக்காக மரித்தேனே எனக்காக நீ என்ன செய்தாய்? (2) 1) திருந்துவாய் என்று நான் நினைத்தேன் நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் - 2 நீயோ தீர்ப்பை எழுதிவிட்டாய் 2) சுமைகளால் சோர்ந்தோரே வருகவென்றேன் சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் - 2 சிலுவை சுமையை எனக்குத் தந்தாய் 3) முழுமுதல் கடவுளைத் தேடச் சொன்னேன் முதல்முறை தரையில் தள்ளி விட்டாய் - 2 முதல்முறை தரையில் தள்ளி விட்டாய் 4) அருள்மிகு நிறைந்த என் தாயை சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் - 2 சந்தியில் சந்தித்து துடிக்கச் செய்தாய் 5) என் சிலுவையைச் சுமக்க நான் உனைத் தேடினேன் சீமோனைக் காட்டி நீ ஒளிந்து கொண்டாய் - 2 சீமோனைக் காட்டி நீ ஒளிந்து கொண்டாய் 6) முகத்தைத் துடைத்தாள் என் முகம் தந்தேன் இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய் - 2 இகம் அகம் சரி பாதி ஏற்க மறுத்தாய் 7) எழுந்து வா திருந்தி வா என்றழைத்தேன் இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் - 2 இரண்டாம் முறையாய் விழச் செய்தாய் 8) அழுதார் அழுதார் அன்புடையார் ஐயோ அதையும் கேலி செய்தாய் - 2 ஐயோ அதையும் கேலி செய்தாய் 9) உறவே உறவே மனிதம் என்றேன் உடைத்து உடைந்து தள்ளிவிட்டாய் - 2 உடைத்து உடைந்து தள்ளிவிட்டாய் 10) சுயநல ஆடையை நீ கொண்டாய் - என் பிறர் நல ஆடையை உரிக்கின்றாய் - 2 பிறர் நல ஆடையை உரிக்கின்றாய் 11) அன்பு அன்பு அன்பே என்றேன் நீயோ சிலுவையில் எனை அறைந்தாய் - 2 நீயோ சிலுவையில் எனை அறைந்தாய் 12) இதற்குமேல் என்ன நான் தருவேன் - என் உயிரையும் தந்தேன் உணர்வாயோ - 2 உயிரையும் தந்தேன் உணர்வாயோ 13) பாசத்தின் மடியில் என்னையும் பார் கதறுகிறாள் என் தாயைப் பார் - 2 கதறுகிறாள் என் தாயைப் பார் 14) நான் புதைந்தேன் என நீ வருந்தாதே நான் புதையும் வரை உயிர்க்காதே - 2 நான் புதையும் வரை உயிர்க்காதே |