புனிதவாரப்பாடல்கள் | மனுக்குலம் மீட்படைய | தூய வெள்ளி |
மனுக்குலம் மீட்படைய மனுவுரு எடுத்தவரே மன்னவா உயிர் தந்து உலகினை மீட்டாயே கல்வாரி பாடுகளின் நாயகனே இறைவா மீட்பினை தந்திடுவாய் (சிலுவை பயணத்திலே) எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ சிலுவை பாடுகள் எல்லாம் எனக்காகவோ 1. குறையில்லை உன்னிடமே கறையில்லா தெய்வம் நீயே குற்றவாளியாகிட நான் பாவம் செய்தேனே நிலையான வாழ்வளிக்கும் நீதிமானே இறைவா பாவ சிலுவையிலே (அறைந்திட தீர்ப்பானீர்) இயேசு தீர்ப்பிடப் படுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ உம்மை தீர்ப்பிட்டதும் எல்லாம் எனக்காகவோ 2. சிலுவையை அணைத்திட்ட இணையில்லா தெய்வம் நீயே உன் தோள் ஏறிட கழுமரம் தவம் செய்ததோ கோர பாவங்களை மன்னிக்கும் என் இறைவா பாவ சுமையினிலே (சிலுவையை சுமந்தாயே) இயேசுவின் மீது சிலுவை சுமத்தப்படுகிறது எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ சிலுவை சுமந்ததும் எல்லாம் எனக்காகவோ 3. பசியால் உடல் வாடி தள்ளாடும் தெய்வம் நீயே தரையில் விழுந்திட புவி தவம் செய்ததோ முள்முடி சூடிய அரசே என் இறைவா குப்புற தரையினிலே (முதல்முறை விழுந்தாயே) இயேசு முதல் முறை கீழே விழுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ முதல்முறை விழுந்திட்டதும் எல்லாம் எனக்காகவோ 4. அன்னை மடியினிலே அமுதான தெய்வம் நீயே உன்னை ஈன்றிட மரி தவம் செய்தாளோ சோதனை வேளையில் கலங்கிய என் இறைவா வேதனையில் வந்த (அன்னையை சந்தித்தாயே) இயேசு அன்னையை சந்திக்கிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ அன்னையின் வேதனையும் எல்லாம் எனக்காகவோ 5. உன்னையே தியாகம் செய்து உதவிய தெய்வம் நீயே உனக்கு உதவிட சீமோன் தவம் செய்தானோ உதவும் கரமான வள்ளலே என் இறைவா சிலுவையில் தள்ளாட (சீமோன் உதவினானே) சீமோன் இயேசுவுக்கு உதவுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ சிலுவையின் தள்ளாடலும் எல்லாம் எனக்காகவோ 6. இரத்தத்தின் வியர்வையிலும் முகம்மலர்ந்த தெய்வம்நீயே உன் முகம் துடைத்திட வெரோணிக்கா தவம் செய்தாளோ உயர்ந்த உம் அழகில் குருவே என் இறைவா உம்முகம் பதிந்திட (வெரோணிக்கா துடைத்தாளோ) வெரோணிக்காள் இயேசுவின் முகத்தை துடைக்கிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ உன் முகம் பதிந்ததும் எல்லாம் எனக்காகவோ 7. கால்கள் தள்ளாடி தளர்ந்திட்ட தெய்வம் நீயே தரையினில் கவிழ்ந்திட மண் தவம் செய்ததோ கசையடி தாங்கிய நேசரே என் இறைவா கல்வாரி தரையினிலே (மறுமுறை விழுந்தீரே) இயேசு இரண்டாம் முறை கீழே விழுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவே மறுமுறை விழுந்திட்டதும் எல்லாம் எனக்காகவோ 8. அழுகைக்கு மருந்தாகும் ஆறுதல் தெய்வம் நீயே உம்மை தொடர்ந்திட பெண்கள் தவம் செய்தாரோ கதறி அழுதிடவே அன்பே என் இறைவா துன்ப வேளையிலும் (ஆறுதல் கூறி சென்றீர்) இயேசு எருசலேம் பெண்களுக்கு ஆறுதல் கூறுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ அழுகையில் ஆறுதலும் எல்லாம் எனக்காகவோ 9. குருதியில் விழி மூட மயங்கிய தெய்வம் நீயே வாடியே வீழ்ந்திட புவி தவம் செய்ததோ நடந்திட முடியாமல் தளர்ந்த என் இறைவா தலைகீழே தரையினிலே (மூன்றாம் முறை விழுந்தீரே) இயேசு மூன்றாம் முறை கீழே விழுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ மூன்றாம் முறை விழுந்திட்டதும் எல்லாம் எனக்காகவோ 10. ஆடைகள் களைந்திட சகித்த என் தெய்வம் நீயே உன் உடை தொட்டிட யூதர் தவம் செய்தாரோ அவமானம் செய்திடவே துவண்ட என் இறைவா கல்வாரி மலையினிலே (ஆடையை களைந்தனரே) இயேசுவின் ஆடைகளை களைகிறார்கள் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ ஆடைகள் களைந்ததும் எல்லாம் எனக்காகவோ 11. ஆணிகள் துளைத்திட கதறிய தெய்வம் நீயே உன் இரத்தம் தொட்டிட உலகம் தவம் செய்ததோ அளவில்லா துன்பத்தையும் தாங்கிய என் இறைவா உன் உடல் துடித்திட (சிலுவையில் அறைந்தனரே) இயேசு சிலுவையில் அறையப்படுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ சிலுவையில் அறைந்ததும் எல்லாம் எனக்காகவோ 12. உன்னுடன் மரித்திட கள்வர் தவம் செய்தனரோ இருண்ட உலகினுக்கு ஒளியான என் இறைவா படையெல்லாம் நடுங்கிடவே (சிலுவையில் மரித்தீரே) இயேசு சிலுவையில் உயிர் விடுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ சிலுவையில் மரித்திட்டதும் எல்லாம் எனக்காகவோ 13. கல்வாரி பயணத்திலே சிதையுண்ட தெய்வம் நீயே உன்னை அணைத்திட அன்னை தவம் செய்தாளோ உலகை மீட்க வந்த மீட்பரே என் இறைவா வியாகுல தாய் அழவே (உன் உடல் தாய் மடியில்) இயேசுவின் உடல் அன்னையின் மடியில் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ வியாகுல வேதனையும் எல்லாம் எனக்காகவோ 14. உலகுக்கு ஒளியாக பலியான தெய்வம் நீயே உன்னை அடக்கிட சூசை தவம் செய்தானோ மீண்டும் உயிர்த்திட மடிந்த என் இறைவா உமக்கு சொந்தமில்லா (கல்லறையில் அடக்கப்பட்டீர்) இயேசு கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறார் எல்லாம் எனக்காகவோ என் இயேசுவே எனக்காகவோ கல்லறை அடக்கமும் எல்லாம் எனக்காகவோ |