புனிதவாரப்பாடல்கள் | -மனம் வருந்தி நீ | தூய வெள்ளி |
மனம் வருந்தி நீ வருவாயா மனம் திருந்தி நீ வருவாயா கல்வாரி நோக்கி கால்களைக் கடித்து கருணை தேவனை பின்தொடர - மனம் வருந்தி பழிகளைச் சுமத்தினரே பாவிகள் ஒன்றுசேர்ந்து சிலுவை சாவினையே சுமத்தி இகழ்ந்தனரே - (அன்று) -2 1. கொடிய சிலுவையினை தோள்மேல் வைத்தனரே கல்வாரி மலையினுக்கு இழுத்து சென்றனரே - (அங்கு) -2 2. சிலுவையின் பளுவாலே விழுந்தார் தரையினிலே துணிவாய் எழுந்து நின்று தொடர்ந்தார் பயணத்தையே-அவர் -2 3. அன்னையின் கண்களிலே அழுகையின் நீர்த்துளிகள் உள்ளம் நொந்தாரே இறைசித்தம் உணர்ந்தாரே - (அன்று) -2 4. இயேசுவின் துன்பத்திலே இணைந்தார் சீமோனும் சிலுவை சுமந்ததனால் சிந்தையில் நின்றாரே - (நம்) -2 5. துணியுடன் ஓடிவந்தாள் துணிவான மங்கை அவள் துயரத்தைத் துடைத்தாளே முகத்தைப் பெற்றாளே - (தூய) -2 6. உடல் பலம் நீங்கியதால் விழுந்தார் மறுமுறையும் தடுமாறி எழுகின்றார் பயணத்தைத் தொடர்கின்றார் - (தன்) -2 7. மங்கையர் கூட்டம் அங்கே மனம் நொந்து அழுகின்றார் எனக்காக அழவேண்டாம் ஆறுதல் மொழிந்தாரே - (இயேசு) -2 8. மூன்றாம் முறையாக சோர்ந்து விழுந்தாரே மனிதரை மீட்டிடவே முயன்றே எழுகின்றார் - (இயேசு) -2 9. உடைகளைப் பறித்திடவே சீட்டுப் போட்டனரே ஆடையைப் பிடுங்கிடவே தசையைக் கிழித்தனரே - (அவன்) -2 10 கூரிய ஆணிகளால் சிலுவையில் அறைந்தனரே கள்வர்கள் நடுவினிலே கொடுமையாய் நிறுத்தினரே - (அன்று) -2 11. அனைத்தும் முடிந்ததென்று கண்களை மூடுகின்றார் தன்னை அர்ப்பணித்து இறைசித்தம் முடிக்கின்றார் - (அந்தோ) -2 12. தாயின் மடியினிலே சாய்ந்தார் சரமாக ஐய்யோ துடிக்கின்றார் கண்ணீர் வடிக்கின்றார் - (அன்னை) -2 13.மானிட மைந்தனுக்கோ தலைசாய்க்க இடமுமில்லை மாற்றான் கல்லறையில் அடக்கம் செய்தனரே -2 |