Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் எனக்காகத்தானோ எனக்காகத்தானோ சிலுவைப்பாதை

எனக்காகத்தானோ எனக்காகத்தானோ
எனக்காகத்தானோ தேவா- இந்த
சிலுவைப் பயணம் எனக்காகவோ-2

1 நாயகனின் நீதியோ விலைபோனதே ..
சந்தர்ப்ப சாட்சிகள்.... சபை ஏறியதால்!-2 -எனக்காகத்தானோ...

2 நின்தோளில் சிலுவையோ சுமையானதே....
மனிதத்தின் மாண்புகள்... நிறம் போனதால்!-2 -எனக்காகத்தானோ...

3.கதிரவனின் முகமோ பொலிவிழந்ததே.....
கயவர்களின் முரண்கள்.... சரியானதால்!-2 -எனக்காகத்தானோ....

4 தாய்மையின் இதயமோ நூலானதே...
ஆதவன்மேல் கசையடிகள்... வாளானதால்!-2 -எனக்காகத்தானோ...

5.கல்வாரிப் பயணமோ தொடர்கின்றதே....
சீமோனின் தோள்கள்... திடம் தந்ததால்!-2 -எனக்காகத்தானோ...

6 மாபரன் முகமோ பதிவானதே....
மங்கையின் துணிச்சல்... களம் கண்டதால்!-2 -எனக்காகத்தானோ...

7 விழுதலின் வலியோ மெழுகானதே....
எழுதலின் திரிகள்... ஒளி தந்ததால்!-2 -எனக்காகத்தானோ...

8 ஆண்டவரின் பாதமோ மலரானதே.....
ஆறுதலின் குரல்கள்... மருந்தானதால்!-2 - எனக்காகத்தானோ....

9 தேவனின் தேகமோ தரை வீழ்ந்ததே...
பாவிகள்நம் துரோகங்கள்... பளுவானதால்!-2 - எனக்காகத்தானோ...

10 அன்பரின் புண்களோ மடைதிறந்ததே....
ஆடையின் கிழிப்புகள்... நடந்தேறியதால்!-2 -எனக்காகத்தானோ..

11 அலறலின் குரல்களோ வான் கிழித்ததே...
ஆணிகளின் கூர்மைகள்... கரம் சேர்ந்ததால்!-2 -எனக்காகத்தானோ

12 ஆயனின் ஆவியோ விண்சென்றதே...'
மந்தைகள்நம் பாவங்கள்... புவி நிறைந்ததால்!-2 -எனக்காகத்தானோ...

13 தாய்மையின் மடியோ கனமானதே ....
தூதர்களின் வார்த்தைகள்... நிஜமானதால்!-2 - எனக்காகத்தானோ...

14 கல்லறையின் குழியோ அரவணைத்ததே...
மீட்பரின் தியாகங்கள்... விதையானதால்!-2 -எனக்காகத்தானோ





 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?