புனிதவாரப்பாடல்கள் | 1554-மாபரன் யேசு மீட்கவே | தூய வெள்ளி |
மாபரன் யேசு மீட்கவே நம்மை சிலுவை சுமக்கின்றார் 1) பதுமை போலிங்கு செம்மறிதனையே (2) கோழை பிலாத்து தீர்ப்பிடுகின்றார் 2) சிலுவை மரத்தினை மன்னவன் சுமந்திட (2) ஏழையின் பாவமே காரணமன்றோ 3) தோளில் அழுத்தும் சிலுவையின் பாரம் (2) நிலத்தில் விழுந்தார் முதல்முறையாக 4) யேசுவின் செந்நீர் விழுந்திடுமுன்னே (2) விழுந்தது தாய்மரி கலங்கிய கண்ணீர் 5) சிலுவை பயணத்தின் துயரினைப் பகிர்ந்திட (2) அயலான் சீமோன் முன்வருகின்றார் 6) நேசரின் முகத்தை வெரோணிக்காள் துடைத்தாள் (2) பாச முகமது பதிந்ததே பரிசாய் 7) துயர்நிறை பயணம் களைப்பினைத் தந்திட (2) மைந்தனார் வீழ்ந்தார் மறுமுறையாக 8) கலங்கிய ஜெருசலேம் மகளிரைக் கண்டு (2) மாண்புடன் நடந்திட ஆறுதல் சொன்னார் 9) மூன்றாம் முறையாக விழுந்திடச் செய்தது (2) எந்தன் சிந்தனை சொல் செயலன்றோ 10) உடலதை மூடிய ஆடையைக் களைந்திட (2) முள்ளொன்று தைத்தது அன்பரின் நெஞ்சில் 11) சிலுவை என்ற உன்னதப் பீடத்தில் (2) பலிப்பொருளாக சாய்ந்தார் தனையே 12) தன்னுயிர் தனையே தியாகம் செய்து (2) சுதனும் மரித்தார் சிலுவையிலன்றோ 13) நொந்தழுதாளே வியாகுலத் தாய்மரி (2) ஊயிரற்ற மகனை மடிதன்னில் சுமந்து 14) மண்ணகப் பயணத்தின் பணியது முடிந்திட (2) விண்ணக வாயினால் கல்லறை சென்றார் 15) பாவத்தின் கொடுக்கால் மரணத்தை வென்று (2) உயிர்ப்பால் கனிதனை பரிசெனத் தந்தார் |