புனிதவாரப்பாடல்கள் | 1553-பாடுகளின் பாதையிலே | தூய வெள்ளி |
பாடுகளின் பாதையிலே தேவமகன் ஊர்வலமோ பாவங்களின் பாரமெல்லாம் திருச்சிலுவை வடிவல்லவோ 1) மக்களுக்காய் இரங்கி நின்றார் மக்கள் மனம் இரங்கவில்லை பக்கமெல்லாம் பறந்ததம்மா பார்த்த கண்கள் சிவந்ததம்மா 2) முடிதாங்கும் சிரசினிலே முள்தாங்கும் நிலையல்லவா அணைத்திருக்கும் கரங்களுக்கு பிணைத்திருக்கும் முடிவல்லவா 3) வாழ வைக்க வந்த உள்ளம் வாடி நிற்கும் நிலை இங்கு தேடி வந்த திருமகனைச் சாடி நிற்கும் மனங்கள் இங்கு 4) அன்பு செய்ய வந்த நெஞ்சம் துன்பம் பெறும் கொடுமையிது என் இறைவா இறைஞ்சுகிறோம் ஏழைகளின் பாவம் பொறும் 5) சீரேனூர் சீமோனிவர் தேவமகன் தான் சுமக்கும் பாரமரச் சிலுவையிலே பங்கெடுத்தார் இங்கிதமே 6) மங்கை நல்லாள் வெரோணிக்கா தங்க முகம்தான் துடைக்க விந்த முகச் சாயலுமே வெண்துகிலில் பதிந்ததுமே 7) பாரமரச் சுமை அழுத்த தேவபரன் சோர்வுடனே மறுமுறையும் வீழ்ந்தனரே பரமசுதன் பார்தனிலே 8) நொந்தழுது நெஞ்சுருகும் மங்கையர்க்கு மாபரனார் சிந்தைகொள் வாக்குரைக்க விந்தையுரை தான் நினைப்போம் 9) பாரமரச் சிலுவையுடன் தூரவழிப் பாதையினில் தேவசுதன் மும்முறையாய் மேவுதரை வீழ்ந்தெழுந்தார் 10) கல்மனத்துக் காவலர் தாம் நம்பரனின் ஆடைகளை வன்மனதாய் களைந்தவரின் செயலினைத்தான் நாம் நினைப்போம் 11) தேவசுதன் இயேசுவையே நீசயூதர் சிலுவையிலே சோகமுற அறைந்தனரே பேச உள்ளம் பேதலிக்கும் 12) அன்பு செய்ய வந்த நெஞ்சம் துன்பம் பெறும் கொடுமையிது ஏன் இறைவா இறைஞ்சுகின்றோம் ஏழைகளின் பாவம் பொறும் 13) உயிர் நீத்து மீட்பளித்த உயர் தேவன் உடல்தனையே கீழிறக்கித் தாய் மடியில் கிடத்தியதோர் துயர்காட்சி 14) திருச்சுதனின் திரு உடலும் பெருங்குழியில் அடக்கப்படும் அரும்பெரும் காட்சியிதே ஆண்டவரின் மாட்சியிதே |