புனிதவாரப்பாடல்கள் | 1551-எங்கு போகிறீர் | தூய வெள்ளி |
எங்கு போகிறீர் இயேசு தெய்வமே எனக்காய் சிலுவையை சுமக்கும் தெய்வமே 1) பாரச்சிலுவையோ என் பாவச்சிலுவையோ நீர் சுமந்தது என் பாவச்சிலுவையோ உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 2) கசையால் அடித்தது என் காம உணர்ச்சியால் காறித்துப்பியது என் பகைமை உணர்ச்சியால் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 3) உலக ஆசையால் நான் உம்மை மறந்தேனே உம் அருளைத் தேடாமல் நான் இருளை நாடினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 4) துன்பம் வந்ததும் நான் சோர்ந்து போகிறேன் அன்பர் இயேசுவே உம்மை மறந்து போகிறேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 5) பொறாமை கோபத்தால் உம் கன்னம் அறைந்தேனே வீண் பெருமை எரிச்சலால் உம் விலாவைக் குத்தினேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 6) வெரோணிக்காள் உம்மை கண்டுகொண்டாளே நாங்களோ உம்மை காண மறுக்கின்றோம் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 7) மீண்டும் மீண்டும் நான் பாவம் செய்தேனே மீட்பர் இயேசுவை விட்டு விலகிச் சென்றேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 8) தீய சிந்தனை நான் நினைத்ததால் உன் சிரசில் முள்முடி நான் சூட்டினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 9) அசுத்த பேச்சுக்கள் நான் பேசி மகிழ்ந்ததால் கசப்புக்காடியை நான் குடிக்கக் கொடுத்தேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 10) அகந்தை அநீதியால் உன் உடை களைந்தேனே என் ஆணவச் செருக்கினால் உம்மை இகழ்ந்தேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 11) தீய வழியில் நான் நடந்து திரிந்ததால் உன் காலில் ஆணிகள் துளைக்கச் செய்தேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 12) சிலுவை மரணத்தை நான் வாங்கிக் கொடுத்தேனே உன் ஜீவன் பிரிந்திட நான் பாதை வகுத்தேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 13) துயரால் உன் அன்னை துடிக்கச் செய்தேனே உன் உயிரற்ற உடலை மடி சுமக்கச் செய்தேனே உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் 14) ஆவிபோகவே உம்மை அடக்கம் செய்தேனே மாற்றான் கல்லறை உம் சொந்தமாக்கினேன் உம் உள்ளம் உடைந்ததோ என் பாவச் சேற்றினால்.......... எங்கு போகிறீர் |