புனிதவாரப்பாடல்கள் | இயேசுவே...இரட்சகரே... | தூய வெள்ளி |
இயேசுவே...இரட்சகரே... உந்தன் திருமுன்னே... நான் நிற்க இயலாமல் போனேனே ஏனெனில் நீர்... என் பாவம் நினைத்துவிட்டீர்... (2) என் யோக்கியதை எல்லாம் என்றும் நீர் அறிவீர்... நீர் அறிவீர்... இயேசுவே நான் செய்த செயல்களெல்லாம் மறந்திட வழியில்லையே 2 மறைவினில் நான் செய்த பாவமெல்லாம் மறைத்திட வழியில்லையே 2 ஏனெனில் நீர் என் வாழ்வில் துணையானீர்... (2) என் யோக்கியதை எல்லாம் என்றும் நீர் அறிவீர்... நீர் அறிவீர்... இயேசுவே உன் அன்பு செயல்களெல்லாம் என் நெஞ்சம் அறியவில்லை 2 மறையினில் மொழிந்த உன் வார்த்தைகளால் மனதை மாற்றிக்கொண்டேன் ஏனெனில் நீர் என்னோடு இருக்கின்றீர்... (2) என் யோக்கியதை எல்லாம் என்றும் நீர் அறிவீர்...நீர் அறிவீர்... இயேசுவே நான் செய்த பாவங்களை நினைத்தேன் அழுகின்றேன். 2 அருகினில் அமர்ந்து உன் பாதங்களை கண்ணீரில் கழுவுகின்றேன் ஏனெனில் நீர் மன்னிக்கும் இறைவனானீர்... (2) என் யோக்கியதை எல்லாம் என்றும் நீர் அறிவீர்...நீர் அறிவீர்... இயேசுவே |