புனிதவாரப்பாடல்கள் | நான் மனம் மாறவேண்டும் | தூய வெள்ளி |
நான் மனம் மாறவேண்டும் இறைவா நிறைவாழ்வை அடைய வேண்டும் கல்லான இதயம் கசிந்திட வேண்டும் முள்ளான என்மனம் மாறிட வேண்டும் (2) பாவத்தை நாளும் விலக்கிட வேண்டும் பரிசுத்தம் என்னில் புகுத்திட வேண்டும் (2) அன்பை நாளும் அணிந்திட வேண்டும் அநீதி யாவும் விலக்கிட வேண்டும் (2) கள்ளம் கபடம் நீக்கிடவேண்டும் கனிவான இதயம் கொண்டிட வேண்டும் (2) தாழ்ச்சியாய் யானும் வாழ்ந்திட வேண்டும் தன்னலம் நீக்கி வாழ்ந்திட வேண்டும் (2) அகந்தை அனைத்தும் அகற்றிட வேண்டும் பொறுமை காத்து நடந்திட வேண்டும் (2) எளியோரைக் கண்டு மனம் இரங்கிட வேண்டும் எல்லோரையும் ஒன்றாய் நினைத்திட வேண்டும் (2) நன்றி நிறைத்து வாழ்ந்திட வேண்டும் நன்மைகள் வாழ்வில் அடங்கிட வேண்டும் (2) |