புனிதவாரப்பாடல்கள் | மன்னிப்பாயா மன்னிப்பாயா | தூய வெள்ளி |
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னவனே என்னை மன்னிப்பாயா பாதை தவறி நான் அலைந்தேன் பாவக்குழியில் நான் விழுந்தேன் தாங்கிய கரங்களை உதறி விட்டேன் - உன் ஏங்கிய இதயத்தை நொறுக்கி விட்டேன் மாய உலகத்தில் எனை இழந்தேன் மங்காத ஒளி உம்மை மறந்து விட்டேன் மாபரன் குருதியைச் சிதற விட்டேன் மனிதனின் குணத்தைக் குறைத்து விட்டேன் மன்னிக்கிறேன் மன்னிக்கிறேன் என்மகனே(ளே) எப்போதும் மன்னிக்கிறேன் (2) முள்முடி வேதனை உனக்காக மும்முறை விழுந்ததும் உனக்காக ஆணி கொண்ட காயங்கள் உனக்காக என் ஆவியும் உயிரும் உனக்காக சிலுவைப்பாடுகள் உனக்காக சிந்திய திரு இரத்தம் உனக்காக கல்வாரிப் பலியும் உனக்காக காலமெல்லாம் நான் உனக்காக |