புனிதவாரப்பாடல்கள் | என் மீது இரக்கம் வையும் | தூய வெள்ளி |
என் மீது இரக்கம் வையும் - என் மன்றாட்டுக்கு செவிசாயும் ம்.ம் (2) தூயதோர் உள்ளம் என்னிலே தாரும் குருதியின் ஆவியை அனுப்பிவையும் - 2 நான் செய்த பாவம் சுமையாய் உள்ளது பாவத்தைக் கழுவி தூய்மையாக்கும் - 2 பாசத்தால் என்னை அன்னை கருத்தரித்தாள் பாசத்தால் பாவத்தைக் கழுவிவிடும் - 2 ஈசோப் புல்லினால் என்னைக் கழுவும் வெண்பனியிலும் நான் வெண்மையாவேன் - 2 திருமுன்னிலிருந்து தள்ளிவிடாதேயும் - உம் ஆவியை அகற்றிவிடாதேயும் - 2 மீட்பின் மகிழ்ச்சியை என்னிலே தாரும் தன்னார்வ மனம் தந்து எனைத் தாங்கும் - 2 என் கடவுளே மீட்பின் தேவனே இரத்தப்பழி விழாமல் காத்தருளும் - 2 தேய்வமே எனது நாவினைத் தொடுமே நாளுமே உம்மை நான் பாடிடுவேன் - 2 நொறுங்கிய உள்ளம் உமக்கு ஏற்;றபலி அதையே உவந்து நான் அளித்திடுவேன் - 2 |