Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் தூய வெள்ளி
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம்
இயேசுவின் இரத்தம் ஜெயம் ஜெயம் -2

நம் வாழ்வினில் நம்பிக்கை இழந்தோமா
பெரும் வருத்ததில் இயேசுவை இழந்தோமா - 2
வெறும் இன்பத்திலே தன்நிலை மறந்து
கடும் பாதையில் வாழ்வை தொலைத்தோமா

இறை அன்பினை விட்டு அகன்றோமா 
மறை உண்மையின் தெளிவை அடைந்தோமா -2
முறை தவறிவிடும் பிறர் வழி நடந்து
நிறை வாழ்வை தினமும் இழந்தோமா

நம் வாழ்வினில் மனிதத்தை மறந்தோமா 
அவர் புனிதத்தை விலக்கிச் சென்றோமா - 2
இறை ஆட்சியிலே மறைசாட்சிகளாய்
நாம் இயேசுவைப் பின்பற்றி நடந்தோமா

 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?