புனிதவாரப்பாடல்கள் | வியாகுல தாயே வினைகளை | தூய வெள்ளி |
வியாகுல தாயே வினைகளைத் தீர்ப்பாய் நீயே கடவுளின் மகனை கருவினில் ஏற்றாய் நீயே உள்ளம் உடைந்து வாழும் மக்கள் உந்தன் அருளை வேண்டி வந்தோம் கண்ணீர் மல்க கரைந்து வந்தோர் கவலை தீர விரைந்து வந்தோம் தேடிச்சென்று உதவிடும் ஆறுதலின் அன்னையே நாடிவந்த மக்களுக்கு நலம்தருவாய் அன்னையே ஏழைகளின் நற்செய்தி நீயாவாய் அன்னையே துன்பங்களை வென்றெடுத்த வியாகுல அன்னையே மனிதம் போற்றும் மாமரியே வியாகுல அன்னையே மானுடத்தின் விடிவெள்ளி வியாகுல அன்னையே உறவுகளின் உறைவிடமே வியாகுல அன்னையே இறையாட்சியின் சாட்சியே வியாகுல அன்னையே |