புனிதவாரப்பாடல்கள் | உள்ளங்கள் உருகிட |
உள்ளங்கள் உருகிட உணர்வுகள் ததும்பிட விழிகளும் நிரம்பிட மொழிகளும் தவித்திட இறைமகன் புரிந்த தியாகம் நினைந்து இதயங்கள் புரியும் தவத்தின் காலம் இருள்தரும் நிலைகள் வாழ்வில் கடந்து ஒளியினில் நடக்கும் வரத்தின் காலம் தவக்காலம் தவக்காலம் கடவுளின் புதல்வனே கருணையின் நிமித்தமாய்- பாவங்கள் சுமந்ததால் பாடுகள் அடைந்திட்டார் நிகழ்ந்தவை யாவுமே மீண்டும் வந்ததே நினைவினில் தோன்றுமே தவக்காலம் மனதினில் மாற்றம் தோன்றும் மகிமையின் காலம் தவக்காலம் சிலுவையின் பளுவிலே சிதைந்திட்ட உருவிலே மீட்பரின் துயரங்கள் மீட்பினை வழங்கவே விரயங்கள் நீங்கிட தேவைகள் கண்டிட விரைந்திடும் காலமே தவக்காலம் தேவனின் அன்பு ஒன்றே செயல்படும் காலம் தவக்காலம் |