Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் சுமைதாங்கி வாழ்க்கையோ தூய வெள்ளி

சுமைதாங்கி வாழ்க்கையோ சுகமான ராகங்கள் -2
வலுவான துன்பமோ பரமனின் சொந்தங்கள்
கல்வாரி மேடைகள் உறவாகும் பாதங்கள்


ஒளியினை ஏற்றிடும் தீபம் - தன்னை
அழித்தே ஒளியினை ஏற்றும்
உழைப்பினில் உயரும் மனிதன் - உடல்
அழித்தே உலகினில் உயர்வான்
சுமைகளை விரும்பியே சுமப்பதும் இன்று இன்பமே -2
துன்பங்களின் முடிவினிலே இன்பங்கள் பிறந்திடுமே


சுகங்களை இழப்பது ஒன்றே - இங்கு
பிறர்நல வேள்வியின் உணர்வை
தன்னலம் மறந்த இறைவன் - இந்த
தரணியை உயர்த்தவே இறந்தார்
கலங்கரை தீபமாய் இன்று இருப்பது சிலுவையே 2
சுமைகளின் சுரங்களில் பிறப்பது பூபாளமே




 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?