புனிதவாரப்பாடல்கள் | மரணிக்கப் பிறந்தவர் | தூய வெள்ளி |
மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் - அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன் மரணிக்கப் பிறந்தவர் விண்ணின் சுதன் - அதை தரணிக்கு சொல்லுது சாம்பல் புதன் சிலுவைச் சாம்பல் நெற்றியிலே மரச் சிலுவை மரணம் வெற்றியிலே அடையாளங்களை அறிந்து கொள்வோம் உயர் அர்த்தங்களை நாம் தெரிந்து கொள்வோம் சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்வோம் நாம் பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம் பாவத்தை தூரமாய் வீசிச் செல்வோம் சாம்பல் என்பது தவத்தின் தொடக்கம் தவங்கள் எல்லாம் மீட்பில் அடக்கம் (2) தன்னை உணர்தல் மனதின் திருப்பம் திருந்தி வருதல் இறைவன் விருப்பம் � 2 தவநாள் வருவது அழுதிடவா தலைவனை விடாது தொழுதிடவா ஒறுத்தல் முயற்சிகள் எடுத்திடவா - நாம் தவறுகள் வராமல் தடுத்திடவா - 2 சிலுவை என்பது தியாகச் சின்னம் வலியை அன்பு ஏற்கும் திண்ணம் (2) நெற்றியில் அதனை அணிந்த பின்னும் நெஞ்சில் ஏனோ பாவியின் எண்ணம் � 2 தவநாள் வருவது திருந்திடவே தவறுகள் உணர்ந்து வருந்திடவே மனிதம் மனதில் மலர்ந்திடவே - இறை அன்பின் அருகில் இருந்திடவே - 2 சாம்பல் புதனில் மாற்றம் பிறக்கும் பாவம் அழிந்தால் வாழ்க்கை சிறக்கும் (2) நெருப்பில் குருத்து ஓலைகள் இறக்கும் நேசன் உயிர்ப்பு விண்ணைத் திறக்கும் � 2 அன்பை அறிவதை தவக்காலம் தன்னை தருவதே தவக்காலம் மனம்போல் வாழும் மனிதர்களை - மனம் திரும்பச் செய்வதே தவக்காலம் |