Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் கண்ணீரே கண்ணீரே தூய வெள்ளி
கண்ணீரே கண்ணீரே கல்வாரி கண்ணீரே - இது
செந்நீரின் கதை சொல்லவோ
மரணமே ரணங்களாய் விழுந்திட்ட கணங்களில்
கொடுமையின் வலி சொல்லவோ
வாழ்வுக்கும் சாவுக்கும் சேர்த்து அவர்
அவமாச் சிலுவைக்குள் தனைத் தந்தவர்
எனக்காக எல்லாம் எனக்காக - அவர்
இறுதிக் குருதியும் எனக்காக

தலையில் முள்முடி எனக்காக
மண்ணில் தவறி விழுந்ததும்
கசையடி காயங்கள் எனக்காக
தசை கிழிந்ததன் வலிகளும்
எனக்காக எல்லாம் எனக்காக - அவர்
இறுதிக் குருதியும் எனக்காக

கடவுளை நோக்கி எனக்காக
ஐயோ கதறி அழுததும் எனக்காக
அடையாளப் பலகை எனக்காக
மூன்று ஆணிக்குள் மரித்ததும் எனக்காக
எனக்காக எல்லாம் எனக்காக - அவர்
இறுதிக் குருதியும் எனக்காக

வதங்கிய மலரைப்போல் பிணமாக
தாய்மடியில் கிடந்தாய் எனக்காக
கதிரவன் மறையும் வேளையிலே
நீ கல்லறையில் கிடந்ததும் எனக்காக
எனக்காக எல்லாம் எனக்காக - அவர்
இறுதிக் குருதியும் எனக்காக


 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?