புனிதவாரப்பாடல்கள் | கண்ணான இயேசுவே | தூய வெள்ளி |
கண்ணான இயேசுவே கல்வாரி மலையிலே எந்தன் கண்ணான இயேசுவே அந்த கல்வாரி மலையிலே நீங்கள் சிந்திய இரத்தமும் கண்ணீரும் சிந்தையில் வதைக்குதே எங்கள் உள்ளத்தை உருக்குதே எந்தன் கண்ணான இயேசுவே அந்த கல்வாரி மலையிலே மன்னிப்பின் பொன் எழுத்தே மனிதத்தின் உயிர் எழுத்தே உயிர் வதைக்கப்பட்ட மெய் எழுத்தே அநீதிக்கு அஞ்சாத உயிர் மெய்யே உன்னையே பாடுவேன் நான் உன்னையே பாடுவேன் ஆண்மயில் போல கம்பீரம் கொண்டாயே ஆணியால் குத்துண்ட அழகான றோஜாவே ஆண்மயில் போல கம்பீரம் கொண்டாயே ஜந்து காயங்கள் சுமந்தாயே மனித ஜயங்கள் தீர்த்தாயே உன்னையே பாடுவேன் நான் உன்னையே பாடுவேன் |