புனிதவாரப்பாடல்கள் | கல்வாரி மீதில் |
கல்வாரி மீதில் கருணை தேவன் கனிந்த உள்ளமே சிதைந்த கோலமே என் பாவங்கள் நான் செய்த தீமைகள் ஆணியாய் முள்முடியாய் உம்மைக் காயப்படுத்தின இயேசுவே உம் பாடுகள் எனை மீட்கவே (2) தரணியாளும் வேந்தனே சிலுவை மரத்தில் முழுமையாய் முழுமையாய் குருதியில் தோய்ந்து தேய்ந்து பரிதாபமாய் இயேசு உன் தியாகம் இதுவன்றோ இயேசுவின் அன்பில் எல்லையுண்டோ என் பாவங்கள் நான் செய்த தீமைகள் ஆணியாய் முள்முடியாய் உம்மைக் காயப்படுத்தின இயேசுவே உம் பாடுகள் எனை மீட்கவே (2) தன்னை வழங்கும் தியாகமாய் துன்பப் பாடுகள் அனுபவித்து இன்றுயிர் நீங்கா சிலுவையிலே ஆ...ஆ....ஆ....ஆ...ஆ....ஆ.... அன்பே கல்வாரி அன்பே (4) என் பாவங்கள் நான் செய்த தீமைகள் ஆணியாய் முள்முடியாய் உம்மைக் காயப்படுத்தின இயேசுவே உம் பாடுகள் எனை மீட்கவே (2) |