புனிதவாரப்பாடல்கள் | 1550-போகின்றார் போகின்றார் | தூய வெள்ளி |
போகின்றார் போகின்றார் சிலுவை சுமந்து போகின்றார் - 2 தூயவன் கால்களில் வலுவுமில்லை மாயவன் விழிகளில் ஒளியுமில்லை நாயகன் வதனத்தில் களையுமில்லை தேவன் உடலில் உறுதியில்லை சிரசில் முள்முடி மணிமுடியோ தோளில் சிலுவை அணிகலனோ கல்லும் முள்ளும் கம்பளமோ சூழும் கயவர் காவலரோ மன்னன் யேசு போதிக்கின்றார் சிலுவை ஏந்திப் போகின்றார் மருளில் மாய்ந்த மானிடரே அருளைப் பொழியப் போகின்றார் |