Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1549-தவறாயிரம் நான் செய்தாலும் தூய வெள்ளி
தவறாயிரம் நான் செய்தாலும் என்னைத்
தவறாமல் நேசிக்கும் பேரன்பே 2

பவ இருள் படர்ந்தவனானாலும் - 2
உவந்துமக்கே என்னை முழுதும் தந்தேன்

கவலைகள் எத்தனை அடுத்தாலும் - பொல்லாச்
சபலங்கள் எந்தனைத் தடுத்தாலும் - 2

நிலையாய் உன்தனின் அருள் ஈந்து நான் - 2
நிலை குலையா வண்ணம் கருணை செய்வாய்

தாய் தந்தை நண்பரும் விடுத்தாலும் - எந்தத்
தாங்கரும் துன்பமே தொடுத்தாலும்

தந்தை தாய் சர்வமும் நீரிருக்க நான் - 2
சஞ்சலமுறுவது முறையல்லவே

 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?