Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1545-சிலுவை மரமே தூய வெள்ளி


சிலுவை மரமே சிலுவை மரமே
உன்னை நான் முத்தி செய்கிறேன் (2)
இறைவன் இயேசு உன்னைச் சுமக்க
என்ன தவம் செய்தாய் (2)

பாவச் சுமையின் சின்னமாக - உன்னைச்
சுமந்த இயேசுவே (2)
புதிய வாழ்வின் புனிதமாக - உன்னை
உயர்த்திவிட்டார் (2)

ஆணி கொண்டு உன்னில் - அறைந்து
உயிரை நீத்தார் இயேசுவே (2)
மேனி வழிந்த குருதி - நனைந்து
புனிதமானாய் சிலுவையே (2)

இறைவன் வார்த்தை இறுதியாக - உந்தன்
மேலே ஒலித்தது (2)
அன்பும் அருளும் ஆசி - பொழிவும்
உந்தனிடமே பிறந்தது (2)

பிறந்த நிகழ்வும் இறந்த - விதமும்
அடிமைக் கோலக் காட்சியே (2)
நிகழ்ந்ததனைத்தும் சிகரமாக - உன்னில்
முடிந்தது மாட்சியே (2)

தலையைச் சாய்த்து உயிரை - நீக்க
அன்னை மடியும் இல்லையே (2)
கரங்கள் விரித்து உன்னில் - மரித்தார்
புனிதமானாய் சிலுவையே (2)
 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?