Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1544-சிலுவையை நிமிர்ந்து தூய வெள்ளி
சிலுவையை நிமிர்ந்து பாராயோ - அதன்
புதுமையை கொஞ்சம் கேளாயோ
உலகமே (4)

பாவியை மன்னிக்கும் சிலுவையிது - புது
ஆவியைத் தந்திடும் சிலுவையிது
துன்பத்தைப் போக்கிடும் சிலுவையிது - மனத்
துயரத்தை நீக்கிடும் சிலுவையிது
சிலுவையிது  (4)

குறைகளை அகற்றிடும் சிலுவையிது - பல
நிறைகளை அளித்திடும் சிலுவையிது
மரணத்தை வென்ற சிலுவையிது - பலர்
மானத்தைக் காத்த சிலுவையிது
சிலுவையிது  (4)

அன்பினை வளர்க்கும் சிலுவையிது - உன்
பண்பினை உயர்த்திடும் சிலுவையிது
உண்மைக்குச் சான்றாம் சிலுவையிது - பல
தின்மைக்கு மருந்தாம் சிலுவையிது
சிலுவையிது  (4)
 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?