புனிதவாரப்பாடல்கள் | 1543-என்னுடைய பிரசையே | தூய வெள்ளி |
என்னுடைய பிரசையே உனக்கு நான் என்ன செய்தேன் ஏது காரியத்தில் உன் மனதிற்குக் கஸ்தி வருவித்தேன் சொல்லாய் உன் முகாந்திரமாய் எகிப்தையும் அதன் தலைச்சன் பிள்ளைகளையும் நான் வாதித்ததைப் பற்றியோ - நீ என்னைக் கசையடிக்கு ஒப்புக் கொடுத்தாய் நான் பாரவோனைச் செங்கடலில் அமிழ்த்தச் செய்து உன்னை எகிப்து பூமியிலிருந்து மீட்டதைப் பற்றியோ குருப்பிரசாதிகள் கையில் நீ என்னைக் கையளித்தாய் உனக்கு முன்பாக நான் செங்கடலைத் திறக்கச் செய்ததைப் பற்றியோ நீ என் விலாவை ஈட்டியால் குத்தித்திறந்தாய் மேகத் தூண் போல நான் உனக்கு வழி காட்டினதைப் பற்றியோ - பிலாத்துவின் அரண்மனைக்கு நீ என்னைக் கூட்டிக்கொண்டு போனாய் வனாந்திரத்தில் நான் மன்னா என்னும் அமிர்த போஜனம் தந்ததைப் பற்றியோ நீ என்னைக் கன்னத்தில் அறைந்து கசைகளால் அடித்தாய் கானான் தேசத்து இராஜாக்களை உனக்காக நான் சிதற அடித்ததைப் பற்றியோ நீ என் சிரசில் மூங்கில் தடியினால் அடித்தாய் உன் கையில் நான் இராஜ செங்கோல் கொடுத்ததைப் பற்றியோ - நீ என் சிரசினில் முள்முடி சூட்டினாய் நான் உனக்கு அதிக பலத்தைத் தந்து உன்னை மகிமைப்படுத்தியது பற்றியோ நீ என்னைச் சிலுவை மரத்தில் தொங்க வைத்தாய் |