புனிதவாரப்பாடல்கள் | 1541-என்னை நேசிக்கின்றாயா | தூய வெள்ளி |
என்னை நேசிக்கின்றாயா - 2 கல்வாரிக் காட்சியைக் கண்டபின்னும் நேசியாமல் இருப்பாயா ( 2) பாவத்தின் அகோரத்தைப் பார் பாதகத்தின் முடிவினைப் பார் - 2 பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே பலியானேன் பாவி உனக்காய் - என்னை பாவம் பாரா பரிசுத்தராகிய நான் பாவி உன்னை அழைக்கின்றேன் வா - 2 உன் பாவம் யாவும் சுமப்பேன் நான் பாதம் தன்னில் இளைப்பாற வா - என்னை வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் உன்னை இழந்ததினால் - 2 தேடி மீட்டிட பிதா அனுப்பினதால் ஓடிவந்தேன் மானிடனாய் - என்னை உம்மை நேசிக்கின்றேன் நான் உம்மை நேசிக்கின்றேன் நான் கல்வாரி காட்சியை கண்டபின்னும் நேசியாமல் இருப்பேனா (2) |