Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1539-ஆணி கொண்ட உம் காயங்களை தூய வெள்ளி
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன்

பாவத்தால் உம்மைக் கொன்றேனே
ஆயனே என்னை மன்னியும்
ஆயனே என்னை மன்னியும்

வலது கரத்தின் காயமே
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது கரத்தின் காயமே
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

வலது பாதக் காயமே
பலன் மிகத்தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

இடது பாதக் காயமே
திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

திருவிலாவின் காயமே
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
 

உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்தாய்?