தவக்காலப்பாடல்கள் | 1535-ஒருவர் மீது ஒருவர் அன்பு |
ஒருவர் மீது ஒருவர் அன்பு கொண்டிருந்தால்தான் என் சீடர் என எல்லோரும் அறிந்து கொள்ளுவர் புதிய கட்டளை புனித கட்டளை அன்பு இல்லாமல் உலகில் ஏது வாழ்வின் கட்டளை பாதம் கழுவிக் காட்டினேன் என் பாதையை நீ பார்த்து வா பாவியை நான் மன்னித்தேன் உன் பாவம் நீங்க மன்னிப்பாய் உடலைத் தந்து வாழ்வித்தேன் உன் உடமையை நீ பகிர்ந்திடாய் என் உயிரைத் தந்து காத்திட்டேன் நீ உலகைக் காக்க எழுந்து வா நண்பன் என்று அழைத்திட்டேன் நீ நன்மை செய்ய நாடி வா உன்னை நானே தேர்ந்திட்டேன் நீ உரிமையாய் என் பின்னே வா உலகம் உன்னை வெறுப்பினும் நீ உவகையோடு மகிழ்ந்து வா - 2 என் உறவில் உனக்குப் பங்குண்டு நீ உண்மைக்காக உழைக்க வா |