Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் உனக்காக பணிசெய்து தூய வியாழன்


ஆஆஆ
Music
உனக்காக பணிசெய்து உன்னோடு நான் வாழ
உணவாக வா என் உயிராக வா
அழியாத உறவே ஆன்மீக விருந்தே -2
நீயாக நான் மாற வா -
துணையாக என் வாழ்வில் வா-2

ஆஆஆ music
அன்பு செய்து வாழ்வதை
உன் நினைவாக செய்ய
உண்மை வழியில் நடப்பதை
உன் நினைவாக செய்ய
இறைசாயல் பிறரில் காண்பதை
உன் நினைவாக செய்ய
நீதிக்காக உழைப்பதை
உன் நினைவாக செய்ய
உடைத்து என்னைக் கொடுப்பதை
உன் நினைவாக செய்ய
உரிமைப் போரில் இணைவதை
உன் நினைவாக செய்ய
உன் நினைவாக செய்ய
உணவாக வா உயிராக வா
உறவாக வா உடன்வாழ வா

மனித மாண்பை காப்பதை
உன் நினைவாக செய்ய
எளிய வாழ்வு வாழ்வதை
உன் நினைவாக செய்ய
வறியோர் விழிநீர் துடைப்பதை
உன் நினைவாக செய்ய
தாழ்ந்தோர் தலைமை வளர்ப்பதை
உன்நினைவாக செய்ய
சாதி பேதம் ஒழிப்பதை
உன் நினைவாக செய்ய
சமத்துவ உலகம் படைப்பதை
உன் நினைவாக செய்ய
உன் நினைவாக செய்ய
உணவாக வா உயிராகவா
உறவாக வா உடன்வாழ வா

 

உங்களுக்கன்பு நான் செய்தது போலவே
ஒருவருக்கொருவர் அன்பு செய்வீர்