புனிதவாரப்பாடல்கள் | 1537-தியாக தீபம் யேசுவின் | குருத்து ஞாயிறு |
தியாக தீபம் யேசுவின் திருவுடல் இதுவே தேடும் நெஞ்சம் தேற்றவரும் திருவுணவிதுவே அன்பு நெஞ்சம் கொண்டவரே உண்ண வாருங்கள் உணவை உண்டு தனையளித்து தரணி மாற்றுங்கள் கோதுமை மணியின் பலியினிலே - இந்த வெண்மை அப்பம் பிறக்கின்றது என்றும் ஏங்கிடும் மாந்தர் வாழ்ந்திட தன்னைத் தியாகமாய்த் தருகின்றது - இதை உண்ணும் யாவரும் தன்னைப் பிறர்க்கென அளித்திடக் கேட்கிறது அளித்திடக் கேட்கிறது நம்மையும் உணவென நாம் கொடுப்போம் -பிறர் நலமுடன் வாழ்ந்திட உயிர் கொடுப்போம் விருந்தினில் கலந்திடும் பொழுதினிலே நெஞ்சில் பேத உணர்வுகள் மறைகின்றன ஏழை அடிமைகள் உயர்வு தாழ்நிலை என்ற பிரிவினை இறக்கின்றன பிறர் பணிகள் செய்வதே தலைவன் பணியென்ற படிப்பினைத் தருகின்றது படிப்பினைத் தருகின்றது விருந்தினில் கலந்திடும் பொருள் உணர்வோம் -பிறர் பணிசெய்து வாழ்வதில் நிறைவடைவோம் |