Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1534-உங்களுக்காகக் கையளிக்கும்  
உங்களுக்காகக் கையளிக்கும் இயேசுவின் உடலிது 2
இதை வாங்கி உண்ணுங்கள் புது வாழ்வு காணுங்கள்
இயேசுவின் உடலாக மாறுங்கள்

பருகி மகிழும் கிண்ணம் ஒன்று - இனி
பகைமை உணர்வு நம்மில் எதற்கு 2
விருந்தில் வழங்கும் அப்பம் ஒன்று 2 எனில்
உயர்வு தாழ்வு நம்மில் எதற்கு
ஒரு கொடி கிளையாய் நாம் இனி இணைந்து
சமத்துவப் பயணம் பாரினில் தொடர்ந்து
அன்பின் கனிகள் தருவோம்

புதிய உலகம் ஒன்று மலர - இறை
அரசின் கனவு எங்கும் விடிய 2
பழைய மனிதன் தனைக்களைய - 2 - இன்று
புதிய இயல்பை அன்பில் அணிய
தனதுடல் உடைத்தவர் அன்னமாய்த் தந்தார்
ஒருமைப்பாட்டின் சின்னமாய் வந்தார்
அவரின் உடலை உண்போம்

உரிமை அடிமை என்ற பேதம் - இந்த
உணர்வை உணர்ந்து உளம் மாறும் - 2
ஏழ்மை வறுமை என்னும் காயம் - 2 பெற்ற
வாழ்வைப் பகிர இங்கு ஆறும்
தன்னுயிர் தியாகம் ஏற்றிட அழைக்கும்
விண்ணக விருந்தை சுவைத்திட எழுவோம்
கொடுத்து நிறைவைக் காண்போம்








 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்