Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

தவக்காலப்பாடல்கள் 1533-உங்களுக்கன்பு நான் செய்தது  
உங்களுக்கன்பு நான் செய்தது போலவே
அன்பொருவருக்கொருவர் செய்வீர் - 2

தாம் உலகில் நின்று தந்தையிடம் செல்லும்
நேரம் வந்ததை அறிந்த யேசு
தம்மவர் மேல் அன்பு கூர்ந்திருந்தார் அவர்
இறுதி வரையும் அன்பு கூர்ந்தார்

பாஸ்கா விழாவிற்கு சீடருடன் இயேசு
பந்தி இரவில் அமர்ந்த போது
எழுந்து சீடரின் பாதம் கழுவி
துணியினால் அவர் துடைத்தாரே

போதகர் ஆண்டவராகிய நானே
சாதனை இன்றுங்களுக்களித்தேன்
நீங்களும் ஒருவர் ஒருவர் பாதங்கள்
கழுவ வேண்டுமெனப் பணித்தார்

உங்களுக்கு ஒரு புதிய கட்டளை
இன்று நான் கொடுக்கின்றேன் இதோ
உங்களுக்கன்பு நான் செய்தது போலவே நீங்களும்
ஒருவருக்கொருவர் அன்பு செய்வீர்

இத்தகைய அன்புகொண்டிருந்தாலே - என்
சீடரென்று எல்லோரும் அறிவர்
இவ்வாறு அன்புடன் அன்றிரவு - தம்
சீடருக்கே இயேசு பணித்தார்

சாகுமுன் எமக்கு சாசனமாகவே 
சோதர அன்பினையே புகட்டி
நற்கருணை மூலம் அற்புதமாய் அதை
தற்பர அன்புடன் இணைத்தாரே






 

தவக்காலம் இது தவக்காலம்
வாழ்வுகள் மலர்ந்திடும் அருட்காலம்