தவக்காலப்பாடல்கள் | 1532-இறைவன் அழைக்கின்றார் |
இறைவன் அழைக்கின்றார் இனிய உணவிற்கு இறைகுலமே நாம் இணைந்தே சென்றிடுவோம் பன்னிரு சீடர்களை பந்தியிலே அமர்த்தி பாதம் கழுவினார் பணிந்து வாழ்ந்திடவே அப்பத்தை கையெடுத்து அன்புடனே கொடுத்து இது என் உடல் என்றார் எல்லோரும் உண்ணுமென்றார் இரசத்தைக் கையெடுத்து என் இரத்தம் என்றுரைத்தார் எல்லோரும் பருகுவீர் எந்நாளும் வாழ்ந்திடவே புதிய உடன்பாட்டின் புதிய சின்னமாக புனிதன் அழைக்கின்றார் புசிக்கச் சென்றிடுவோம் கரங்களை விரித்தே கடவுளின் திருமுன்னே கரங்களைக் கேட்போம் வருத்தும் மானிடரே எங்கேனும் கேட்டதுண்டோ எங்கேனும் பார்த்ததுண்டோ எத்துணை அன்பிது பார் அத்துணை அன்பிலே வாழ் |