தவக்காலப்பாடல்கள் | 1530-இதை என் நினைவாய்ச் |
இதை என் நினைவாய்ச் செய்யமாட்டாயா என் உடலை உண்டு உயரமாட்டாயா குருதி அருந்தி திருந்தமாட்டாயா - என் - 2 என்னைப் போல வாழமாட்டாயா கன்னத்தில் அறைந்தால் கன்னத்தைக் காட்டச் சொன்னேன் தீமை செய்தால் நன்மை செய்யச்சொன்னேன் (2) இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2 வெறும் வார்த்தையல்ல வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2 பணிவிடை பெற அன்று பணியைச் செய்யச்சொன்னேன் தாழ்ச்சி கொண்டால் உயர்வு உறுதியென்றேன் (2) இதற்கு மேல் நான் என்ன கேட்கின்றேன் - 2 உனை வாழச் செய்ய வாழ்ந்தும் காட்டிவிட்டேன் - 2 |