புனிதவாரப்பாடல்கள் | மான்கள் நீரோடை ஆர்வமாய் | புனித சனி |
என் இறைவா..... என் அரசே........ உன்னிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன் மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல் போல் இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - கலை அடைக்கலான் குருவிக்கு வீடும் கிடைத்தது தகைவிலான் குஞ்சுக்கு கூடும் கிடைத்தது ஆனால் இறைவா எம் அரசே எனக்கோ உம்மிடம் தஞ்சம் கிடைத்தது (2) மான்கள் நீரோடை ஆர்வமாய் நாடுதல்போல் இறைவா என் நெஞ்சம் உம்மை நாடிடுதே - கலை வரண்ட பாலைக்கு நீரும் கிடைக்கும் ஏங்கும் நெஞ்சுக்கு வார்தையும் கிடைக்கும் ஆனால் இறைவா என் உயிரே நீயின்றி எனக்கு வாழ்வெங்கு கிடைக்கும் நீயின்றி எனக்கு வாழ்வு ஏது கிடைக்கும் |