Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1560-உமது ஆவியை விடுத்தருளும் புனித சனி
உமது ஆவியை விடுத்தருளும் திருப்பா 103-104

உமது ஆவியை விடுத்தருளும்
ஆண்டவரே பூமியின் முகத்தைப் புதுப்பித்தருளும்

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக
ஆண்டவரே என் இறைவா நீர் எத்துணை உயர்ந்தவர்
மாண்பும் மகத்துவமும் நீர் அணிந்திருக்கின்றீர்

பூமியை நீர் அடித்தளத்தின் மேல் அமைத்தீர்
அது எந்நாளும் அசையவே அசையாது
கடல்களை அதற்கு உடையெனத் தந்திருக்கிறீர்
வெள்ளப்பெருக்கு மலைகளையும் மூடியிருக்கும்படி செய்தீர்

நீரூற்றுகள் ஆறுகளாய் பெருக்கெடுக்கக் கட்டளை இடுகிறீர்
அலைகளிடையே அவைகளை ஓடச் செய்கின்றீர்
அவற்றினருகே வானத்துப் பறவைகள்கூட குடியிருக்கின்றன
மரக்கிளைகளிடையே இன்னிசை எழுப்புகின்றன

ஆண்டவரே உமது வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை
அனைத்தையும் ஞானத்தோடு செய்து முடித்தீர்
உம் படைப்புகளால் நிறைந்துள்ளது வையகம்
நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக அல்லேலூயா
 

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவர்க்கு நன்றி செலுத்துங்கள்