புனிதவாரப்பாடல்கள் | இயேசு உயிர்த்து விட்டார் | உயிர்ப்பு |
இயேசு உயிர்த்து விட்டார் அல்லே அல்லேலூயா வாழ்வில் நம்பிக்கையும் கொடியேற்றுவோம் அல்லே அல்லேலூயா சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே (2) துன்பம் வந்தாலும் தோல்வி என்றாலும் எல்லாம் கடந்து போகும் எங்கள் ஆண்டவர் உயிர்த்தார் என்று பரவட்டும் நம்பிக்கை கொடி மகிழ்வோம் வெற்றியின் கனி தட தட தடவென பூமியே அதிர எழு எழு எனச்சுடர் இயேசுவே உயிர்த்தார் தடையென வருபவை நொறுங்கிடுமே அலையென வரும் அவர் ஆற்றலாலே மதவெறி என்றாலும் இனவெறி என்றாலும் சிலுவையால் மறைந்துவிடும் கல்வாரி அன்பால் பகையை வென்ற இயேசுவின் ஒளி பிறக்கும் அமைதியின் வழி பிறக்கும் தட தட தடவென பூமியே அதிர எழு எழு எனச்சுடர் இயேசுவே உயிர்த்தார் தடையென வருபவை நொறுங்கிடுமே அலையென வரும் அவர் ஆற்றலாலே |