புனிதவாரப்பாடல்கள் | வெற்றுக் கல்லறைதான் | உயிர்ப்பு |
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா வெற்றுக் கல்லறைதான் எங்கள் வெற்றிச் சின்னமாம் வெற்றுக் கல்லறைதான் எங்கள் வெற்றிச் சின்னமாய் இயேசு மெசியாவின் உயிர்ப்பினிலே சாவும் வீழ்ந்தது எங்கள் மீட்பும் வந்தது இயேசு மெசியாவின் உயிர்ப்பினிலே இனி பயமேயில்லை வாழ்வில் இருளேயில்லை நம் தேவன் உயிர்த்ததனால் கல்லும் முள்ளும் அலையும் சிலுவையும் என்ன செய்திடும் என்ன செய்திடும் (2) சாட்டையும் ஆணியும் முள்முடி பலியும் என்ன செய்திடும் என்ன செய்திடும் (2) பாவத்தை ஜெயித்து பாதாளம் இறங்கி மூன்றாம் நாள் உயிர்த்தாரே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4) பொன்னும் பொருளும் மண்ணும் ஆசையும் நமக்கு வேண்டாமே வேண்டாமே (2) பட்டமும் பதவியும் சுயநல எண்ணமும் நமக்கு வேண்டாமே வேண்டாமே (2) பரலோகதேவன் தரும் சமாதானம் அது மட்டும் நிலைக்கட்டுமே (2) அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (4) |