புனிதவாரப்பாடல்கள் | உயிர்த்த ஆண்டவர் | உயிர்ப்பு |
அல்லேலூயா அல்லேலூயா உயிர்த்த ஆண்டவர் உயிருடன் உள்ளார் உண்மையில் வாழ்கின்றார் நினைத்த போதினில் நெஞ்சினில் வருவார் நிறைவை அவர் தருவார் ஆவியின் உருவில் அனைவரைக் காக்க அவரே வாழ்கின்றார் விலகிடும் மனங்கள் வீழ்ந்திடாதிருக்க விழித்து காத்திருப்பார் மீண்டும் வந்தால் மீட்பினைத் தருவார் மிக மிகப் பரிவுடையார் உயிர்த்த கரங்கள் கிடைத்துக் கொண்டால் அணைத்து மகிழ்ந்திடுவார் இழந்த மகனை அடைந்த மகிழ்வை இயல்பாய் இனிதே நமக்கருள்வார் நிறைவாழ்வினை அளிக்கும் வார்த்தையைக் கேட்டு வாழ்ந்திட அழைக்கின்றார் வறியவர் எளியவர் வழக்கினில் நீதி நிலைத்திடச் செய்திடுவார் சாவினை வென்று சாதனை செய்து வீரனாய் இருக்கின்றார் உணவாய் வந்து உறவினைத் தந்து உண்மையாய் நம்மைத் தேற்றுகின்றார் |