புனிதவாரப்பாடல்கள் | பாஸ்காப் பலியின் புகழ்தனையே | உயிர்ப்பு |
பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே மாசில் இளமறி மந்தையினை மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன் மாசுறு நம்மை இணைத்தாரே பாஸ்காப் பலியின் புகழ்தனையே பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே சாவும் உயிரும் தம்மிடையே புரிந்த வியத்தகு போரினிலே உயிரின் தலைவர் இறந்தாலும் உண்மையில் உயிரோடாளுகின்றார் வழியில் என்ன கண்டாய் நீ? மரியே, எமக்கு உரைப்பாயே உயிரோடுள்ள கிறிஸ்து பிரான் கல்லறைதன்னைக் கண்டேனே உயிர்த்து எழுந்த ஆண்டவரின் ஒப்பரும் மாட்சியும் கண்டேனே வழியில் என்ன கண்டாய் நீ? மரியே, எமக்கு உரைப்பாயே சான்று பகர்ந்த தூதரையும் போர்த்திய பரிவட்டத்தினையும் அவர்தம் தூய துகிலினையும் நேராய்க் கண்ணால் கண்டேனே வழியில் என்ன கண்டாய் நீ? மரியே, எமக்கு உரைப்பாயே கிறிஸ்து என்றன் நம்பிக்கை, கல்லறை நின்று உயிர்த்தாரே இதோ, உமக்கு முன்னாலே செல்வர் கலிலேயாவிற்கே. வழியில் என்ன கண்டாய் நீ? மரியே, எமக்கு உரைப்பாயே. மரித்தோர் நின்று உண்மையிலே கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம் வெற்றிகொள் வேந்தே, எம்மீது நீரே இரக்கங் கொள்வீரே. வழியில் என்ன கண்டாய் நீ? மரியே, எமக்கு உரைப்பாயே. |