புனிதவாரப்பாடல்கள் | ஆனந்த கீதங்கள் பாடுவேன் | உயிர்ப்பு |
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல் லே லூயா ஆனந்த கீதங்கள் பாடுவேன் (2) போற்றிப் புகழ்ந்து மகிழ்ந்து நானும் ஆடுவேன் என் இயேசு உயிர்த்தார் வெற்றி வீரராக இன்று இயேசு உயிர்த்தார் (2) அல்லேலூயா (8) இறந்தவர் மீண்டும் வருவார் என்று நம்புவோர் பேறுபெற்றார் உயிர்ப்பு இல்லை என்று சொல்லி வாழ்ந்த அனைவருக்கும் மேலொரு வாழ்வு உண்டு என்று சொல்ல வந்தார் என் இயேசு என் இறைவன் அல்லேலூயா (8) இயேசுவின் வார்தை கேட்டு அவரில் நம்பிக்கை நாம் வைப்போம் பூமி மட்டும் சொந்தமென்று எண்ணி வாழும் அனைவருக்கும் விண்ணகம் செல்ல வேண்டும் என்ற பாடம் சொன்னார் என் கடவுள் என் மீட்பர் அல்லேலூயா (8) |