புனிதவாரப்பாடல்கள் | அல்லேலூயா பாடுங்களே | உயிர்ப்பு |
அல்லேலூயா பாடுங்களே ஆர்ப்பரித்து அகமகிழ்வோம் வல்ல தேவன் உயிர்தெழுந்தார் என் வாழ்வுக்கு சாவில்லை என்றார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2) வானகமே வையகமே வைகறை பூத்தது வாழ்த்துங்களே பூங்காற்றே வண்ண மலரளகே புதுவாழ்வு புலர்ந்தது பாடுங்களே எழில் கொஞ்சும் இந்த பூமி எங்கும் இறையரசில் நிலையாக வாழுங்களே அழிவில்லா ஒரு வாழ்வைத் தேடி நிலையான இன்பம் காணுங்களே ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கு குறையில்லையே எதையும் செய்யும் ஆற்றல் உண்டு இயேசுவின் உறுதிக்கு இணையில்லையே எந்த நாளும் நான் உங்களோடு இருப்பேன் என்றவர் துணையிருக்க அன்பால் நாமும் இந்த உலகை வெல்வோம் லட்சிய மனிதராய் வாழ்ந்திடுவோம் |