Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1584-வாரத்தின் முதல் நாளில் உயிர்ப்பு

வாரத்தின் முதல் நாளில்
விடியற் காலை நேரம்
கீழ் வானின் கதிரவன் போல்
யேசு உயிர்த்தெழுந்தார் - 2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா - 2

இருளின் ஆட்சிகள் நிலைப்பதில்லை
ஒளியோ மறைந்து வாழ்வதில்லை
சிலுவைகள் இறப்பினில் முடிந்து விடும்
உயிர்ப்பே முடிவினில் பிறந்து விடும்
இழப்போம் தீமையை பிறப்பது நன்மை
இறப்போம் நீதியில் உயிர்ப்பது உண்மை - 2

கல்;லறை வாயில் கல் புரண்டு
யேசுவின் உயிர்ப்பை புரிந்து கொண்டோம்
இதயத்தின் வாயில் திறந்து விட்டால்
உயிர்த்த நம் யேசுவை வரவேற்போம்
இதயத்தில் இறைவன் இறவாது வாழ்ந்தால்
இறந்தும் வாழ்வோம் உயிர்ப்பில் மகிழ்வோம் - 2
 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்