புனிதவாரப்பாடல்கள் | 1583-மூவுலக இராஜேஸ்வரன் | உயிர்ப்பு |
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மூவுலக இராஜேஸ்வரன் முடிவில்லா ஆதி நாதன் சாவில் நின்று உயிர்த்தொழுந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆதிவாரம் காலைநேரம் அவர் சீடர் கல்லறையை ஆவலோடு காணவந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆசைமிகு மதலேனாள் யாக்கோ தாயும் சலோமையும் வாசனைகள் பூச வந்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இலங்கு வெண்துகில் உடன் இருந்த நற்தூதன் யேசுவை கலிலேயா சென்றார் என்றான் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அருள் உடன் இராயப்பரும் ஆண்டவரின் கல்லறையை விரைவாய் பார்க்க வந்தனர் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா கதவு பூட்டியிருக்க கர்த்தர் தோன்றி உங்களுக்கு சமாதனம் ஆகவென்றார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா |