புனிதவாரப்பாடல்கள் | 1582-மண்ணின்மாட்சி இன்று | உயிர்ப்பு |
மண்ணின்மாட்சி இன்று விண்ணை அடைந்தது ஆர்ப்பரித்துப் பாடுஅந்த மகிமை ராஐன் இன்று விடியல் தந்து விட்டார் அகமகிழ்ந்து பாடு சொன்னபடி அவர் உயிர்த்தெழுந்தார் சொல்லிச் சொல்லிப் பாடு அல்லேலூயா அல்லேலூயா யேசு உயிர்த்து விட்டார் ஆனந்தமே இன்று ஆனந்தமே இயேசு உயிர்த்ததாலே கல்வாரிக்கனவுகள் மண்ணோடு போனது உயிர்ப்பின் மாட்சியாலே இந்த கலைமகன் உயிர்ப்போ நம்பிக்கை தந்தது பேரின்ப வாழ்வினிலே அழியா வாழ்வு அவரில் உண்டு என்றே நம்பிடுவோம் இறப்பு இங்கு வெற்றி கண்டது மகிழ்வாய்க் கொண்டாடுவோம் அவமானச் சின்னம் மீட்பின் கருவியாய் மகிமையான நாளே - நம் துன்ப துயரமோ நிரந்தரமல்ல மகிழ்ச்சி மலர்வதாலே குறையா அன்பு அவரில் உண்டு என்றே நம்பிடுவோம் உண்மை இங்கு உயிர்த்து விட்டது மகிழ்வாய்க் கொண்டாடுவோம் |