Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

புனிதவாரபபாடல்கள் 1578-புதிய இதயம் வேண்டுமா உயிர்ப்பு

புதிய இதயம் வேண்டுமா
புதிய ஆவி வேண்டுமா
காசில்லாமல் பணமில்லாமல்
பெற்றுச் செல்வோம் வாருங்கள்
உயிர்த்த இயேசுவைக் கேளுங்கள்
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா - 4

சாதிகள் இனி இல்லை
மதங்களும் இனி இல்லை (2)
ஏற்றத்தாழ்வுகள் இல்லா
இறைவன் அரசே உண்மை (2)
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா - 4

கடின இதயம் கரைந்து போகும்
நல்ல உணர்வுகள் நம்மில் நிறையும்
இறைவன் வார்த்தை தெளிவைத் தருமே
இயங்கும் நம்பிக்கை நம்மில் மலரும்
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா - 4

வேண்டும் யாவும் விரைவில் வருமே
தேடும் நிம்மதி நெஞ்சில் வருமே
குறைகள் யாவும் மறைந்து விடுமே
நிறை நல்வாழ்வு நம்மில் வருமே
அல்லேலூ அல்லேலூ அல்லேலூயா - 4

 

ஆண்டவர் உயிர்த்தெழுந்தார் - ஆதிசாவினை ஜெயித்தெழுந்தார்